Skip to main content

முலாயம் சிங் யாதவ் மறைவு - குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

Mulayam Singh Yadav- President, Prime Minister condolence!

 

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (வயது 82) உடல் நலக்குறைவால் ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில், கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (10/10/2022) காலமானார். 

 

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 

பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து விடா முயற்சியுடன் சேவை செய்தவர் முலாயம் சிங் யாதவ். உத்தரபிரதேசம், தேசிய அரசியலில் தனித்துவம் மிக்கவராகத் திகழ்ந்த முலாயம் சிங் யாதவ், எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தின் முக்கிய வீரராக இருந்தவர். பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது வலிமையான இந்தியாவுக்காக உழைத்தவர்" என்று புகழாரம் சூட்டினார். 

 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "முலாயம் சிங் யாதவின் மறைவு நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். சாதாரண சூழலில் இருந்து வந்த முலாயம் சிங் யாதவின் சாதனைகள் அசாதாரணமானவை" என்று குறிப்பிட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்