சென்னையை சேர்ந்த குகேஷ் என்ற 12 வயது சிறுவன் இந்தியாவின் மிகக் குறைந்த வயது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும், உலகின் 2-வது இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் பெற்றார். கடந்த செவ்வாய்கிழமை டெல்லியில் நடந்த சர்வதேச ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் இறுதி சுற்றில் தினேஷ் சர்மாவை வீழ்த்தி குகேஷ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதன்மூலம் இந்திய அளவில் மிகக்குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவராக குகேஷ் சாதனை படைத்தார். இந்நிலையில் பிரதமர் மோடி சிறுவன் குகேஷுக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'சிறுவன் டி குகேஷ் தனது சாதனை மூலம் நாட்டை பெருமைப்படுத்தியுள்ளார். அவரது விடாமுயற்சி பாராட்டத்தக்கது! அவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு சிறந்த வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார்.