நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது. மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து மே26 ஆம் தேதி குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க மோடி உரிமை கோருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வெற்றிக்கு பின் மோடி தனது நன்றியை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், "நன்றி இந்தியா! எங்கள் கூட்டணியில் வைக்கப்பட்ட நம்பிக்கை நெகிழவைக்கிறது. மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு கடினமாக உழைக்க எங்களுக்கு வலிமை தருகிறது. ஒவ்வொரு பா.ஜ.க தொண்டனுக்கும் அவர்களின் உறுதிப்பாடு, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றிற்காக நான் வாழ்த்துகிறேன். அவர்கள் தான் வீடு வீடாக சென்று எங்கள் வளர்ச்சி திட்டத்தை மக்கள் விரிவுபடுத்தினர்.