குஜராத்தின் ஜாம்நகரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கேரளாவின் கொச்சி நகரைக் குறிப்பிடுவதற்கு பதிலாக, கராச்சி என்று கூறியது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று அவர் பேசுகையில், " மத்திய அரசு கொண்டுவந்துள்ள மருத்துவ காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஜாம்நகரில் உள்ள மக்கள் நாட்டில் எந்த பகுதிக்கும் சென்று பயன்பெற முடியும். உதாரணமாக ஜாம்நகரைச் சேர்ந்த ஒருவர் போபால் செல்லும் போது திடீரென நோய் ஏற்பட்டால், அவர் மீண்டும் சிகிச்சைக்காக ஜாம்நகர் வரத் தேவையில்லை. இந்த திட்டம் மூலம் நீங்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற முடியும். கொல்கத்தாவில் இருந்தாலும் சரி அல்லது கராச்சியில் இருந்தாலும் நீங்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற முடியும்" என்று தெரிவித்தார்.இதனால் அங்கிருந்த தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் சற்று சுதாரித்த மோடி, நான் கராச்சியைக் குறிப்பிடவில்லை, கொச்சி நகரை குறிப்பிட்டேன். சமீபகாலமாக என் சிந்தையில் அண்டை நாடு குறித்த விஷயங்கள்தான் அதிகமாக இருக்கிறது. அதனால் தான் கராச்சி என்று பேசிவிட்டேன், என கூறினார்.