Published on 22/05/2019 | Edited on 22/05/2019
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக பெரும்பான்மை பெற்று மிண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று பாஜக சார்பில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு டெல்லியில் விருந்து அளிக்கப்பட்டது.

அதன்பின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஈவிஎம் இயந்திரங்கள் குறித்து தேவையற்ற சர்ச்சைகள் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படுகின்றன. இது கவலை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்ததாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.