Published on 25/10/2018 | Edited on 25/10/2018
![rahul](http://image.nakkheeran.in/cdn/farfuture/qHWAC-Y77cE-GDMZloWqdWsJbFug6DNVmeGSyXq_9qE/1540461682/sites/default/files/inline-images/rahul.jpeg)
ராகுல் காந்தி நேற்று ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜலவார் மாவட்டத்தில் காங்கிரஸ் பொது கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்த மேடையில், இந்தியாவில் நடக்கும் சிபிஐ மாற்றம் குறித்து பேசினார். ”சிபிஐ அலோக் வர்மா ரஃபேல் போர் விமான ஆவணங்களை கேட்டதற்காகதான் அவரின் பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்” என்று கூறினார்.
மேலும், ”மோடி தேர்தல் பிரச்சாரத்தின்போது தன்னை இந்த நாட்டின் பாதுகாவலான இருக்க அனுமதியுங்கள் என்று கேட்டார். ஆனால், அவர் இப்போது நாட்டின் கொள்ளைக்காரராக மாறிவிட்டார். விவசாயிகளின் ஒரு ரூபாய் கடனைக் கூட தள்ளூபடி செய்யாத மோடி, நாட்டின் 15 தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனுக்கு விலகு அளித்துள்ளது மோடியின் அரசு. கடனை செலுத்தமுடியாத விவசாயி குற்றவாளியா?” என்று பேசியுள்ளார்.