மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த ஐந்து மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று பாஜகவும், காங்கிரஸும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தங்கள் கட்சிக்காக ஆதரவு திரட்டிவரும் நிலையில், பிரதமர் மோடி பாஜகவுக்காக தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். நேற்றுக்கூட மத்தியப் பிரதேசத்தில் தேர்தலுக்காக பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்நிலையில் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு ஆதரவு திரட்ட 25 பொதுகூட்டங்களில் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் நிலை கொஞ்சம் கவலைக்கிடமாக இருப்பதாக வெளிவந்த தேர்தல் முந்தைய கருத்து கணிப்பை தொடர்ந்து பிரதமர் மோடியே பாஜகவுக்கு ஆதரவு திரட்ட களத்தில் இறங்கியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.