இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரச பயணமாக ஜப்பான் செல்கிறார். இந்தியா மற்றும் ஜப்பான் இடையே 13 வது ஆண்டு உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் மோடியே கலந்து கொள்கிறார். இது குறித்து இந்திய வெளியுறவு துறை செயலர் விஜய் கோகலே கூறுகையில், “ இரண்டு நாள் அரசு முறை பயணமாக வருகிற 28ஆம் தேதி பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டு செல்கிறார். பிரதமர் கலந்து கொள்ளும் ஐந்தாவது உச்சிமாநாடு இதுவாகும். இந்த மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய பிரச்சனைகளை குறித்து விவாதிக்கப்படும். மேலும் இருநாட்டுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது” என்றார்.
ஜப்பான் சென்றவுடன் பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் அபே பிரைவேட் விருந்து வைபாற் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் பிரதமர் இந்தியா வந்தபோது அகமதாபாத்திலுள்ள காந்தி ஆசிரமம் போன்ற இடத்திற்கு எல்லாம் மோடி அழைத்து சென்று சுற்றிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.