பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் தங்கள் பெயருக்கு முன்னால் ‘சவுகிதார்’ என்று சேர்த்துக்கொண்டுள்ளனர். தாங்கள் தான் நாட்டின் காவலாளி என்று குறிக்கும் பொருட்டு பாஜக-வினர் தங்களது பெயரை இவ்வாறு மாற்றியுள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும், வாட்ச்மேன்களாக பணியாற்றும் சுமார் 25 லட்சம் பேருடன் இன்று மாலை 4.30 மணியளவில் உரையாற்றுகிறார். ஆடியோ வசதியில் அவர் பேசுகிறார். ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து, வரும் 31 ஆம் தேதி நாடு முழுவதும் 500 இடங்களில் உள்ள காவலாளிகளுடன் "நானும் காவலாளிதான்" என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். இந்நிலையில் ரபேல் விவகாரத்தில், இந்த நாட்டின் காவலாளியே, திருடனாக மாறும்போது நாடு எப்படி முன்னேறும் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.