Skip to main content

கடைசி நாளில் பிரதமர் மோடியின் பிளாஷ்பேக்... ஆதார் முதல் அவசியமற்ற சட்டங்கள் வரை...

Published on 13/02/2019 | Edited on 13/02/2019

 

hfhjfhgjh

 

மக்களவையின் கடைசி அலுவல் நாளான இன்று பிரதமர் மோடி மக்களவை உறுப்பினர்கள் முன்பு உரையாற்றின்னார். அப்போது பேசிய அவர் நான்கு ஆண்டுகளில் பாஜக அரசு கடந்து வந்த பாதையை பற்றி பேசினார். அப்போது அவர் பேசுகையில், 'பாஜக அரசாங்கம் 100 சதவீதத்துக்கும் அதிகமாக நாட்டுக்காக உழைத்தள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். உலக அளவில் தற்போது இந்திய பொருளாதாரம் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்காக கருப்புப் பண ஒழிப்பு மற்றும் ஊழலுக்கு எதிராக கடும் சட்டங்களை இயற்றினோம். கருப்பு பணம், ஊழலை ஒழிக்க பாஜக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றினோம். மக்களின் அடிப்படையான ஆதார் அட்டையை அமல்படுத்தியதில் உலகையே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது. அதுமட்டுமல்லாமல் நாட்டு மக்களுக்கு அவசியமற்ற 1400 சட்டங்களை நீக்கியுள்ளோம். மேலும் இந்த 16வது மக்களவையில் 44 புதிய பெண் எம்பிக்கள் இடம் பெற்றனர். பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களாக இரண்டு பெண்கள் உள்ளனர். இது இந்த ஆட்சிக்கே பெருமை. 30 ஆண்டுகளுக்கு பின் எனது தலைமையில்தான் ஸ்திரமான ஆட்சி நடந்துள்ளது' என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்