அண்மையில் சிறார்களுக்கு எதிரான பாலியல் கொடுமை குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை அருகே 15 வயது சிறுவனை பாலியல் கொடுமை செய்ததற்காக வெளிநாட்டு நபர் ஒருவர் கைது செய்ப்பட்டார்.
அந்த பாலியல் வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி என்.கிருபாகரன் தலைமையில் நடந்தது. அந்த விசாணையின் இறுதியில், சிறார்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களின் ஆண்மை நீக்கவேண்டும் என்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று 2015-ஆம் ஆண்டே கூறப்பட்டிருந்தது. ஆனால் அதுபற்றிய எந்த முடிவையும் இன்னும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை எனவே மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏற்கனவே பதிவு செய்யபட்டுள்ளது என குறிப்பிட்டார்.
மேலும் சிறார்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு வெளிநபர்கள் மட்டும் காரணம் அல்ல பெற்றோர்களும்தான். ஒரு சிறுமி தொடர்ந்து 7 மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார் என்பதைக்கூட அறியாமல் தாய் என்ன செய்துகொண்டிருந்தார். தன் மகளைக்கூட கவனிக்க முடியாதா? என கேள்வி எழுப்பினார். கூட்டுக்குடும்பம் என்ற நிலை இல்லாமல் போனதாலும், விவாகரத்து பெற்ற தாய் அல்லது தந்தையிடம் வளரும் குழந்தை மனதளவில் பாதிப்புடனே வளர்கிறது எனவும் கருத்து தெரிவித்தார்.
அதுபோல் மத்திய அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை என செயல்படுவதை விடுத்து குழந்தைகளுக்கு என ஒரு தனி துறையை உருவக்கினால் என்ன? எனக்கூறி மத்திய அரசு குழந்தைகளுக்கென தனி துறை அமைப்பது பற்றி விளக்கமளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை 17-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.