Published on 09/12/2020 | Edited on 09/12/2020
15- ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி தமிழகத்திற்கு ரூபாய் 335 கோடியை விடுவித்தது மத்திய நிதியமைச்சகம்.
15- ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி தமிழகம், ஆந்திரா, அசாம், சிக்கிம், கேரளா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், திரிபுரா, உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், மேற்கு வங்கம், மேகாலயா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூபாய் 6,195.08 கோடியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்திற்கு ரூபாய் 335.41 கோடியை விடுத்துள்ளது. அதிகபட்சமாக கேரள மாநிலத்திற்கு ரூபாய் 1,276.91 கோடியும், பஞ்சாப் மாநிலத்திற்கு ரூபாய் 638.25 கோடியும், குறைந்தபட்சமாக சிக்கிம் மாநிலத்திற்கு 37.33 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.