ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விழுந்து நொறுங்கி விபத்து
ஜம்மு காஷ்மீரின் லடாக் செக்டாரில் தரையிறங்க முயன்ற போது ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதிருஷ்டவசமாக இரண்டு ராணுவ கமாண்டர்கள் காயமின்றி தப்பினர். நவீன எளிய ரக ஹெலிகாப்டரான துருவ் நேற்று பிற்பகல் விபத்துக்குள்ளானதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹெலிகாப்டரில் இரண்டு பைலட்கள் மற்றும் ராணுவ கமாண்டாக்கள் இருந்ததாவும் நால்வரும் எந்த காயமும் இன்றி தப்பியதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.