மேகாலயா மாநில சட்டசபையில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருந்தாலும் பெரும்பான்மை வெற்றியில்லை. அதனால், பாஜக மற்றும் தேசிய மக்கள் கட்சி இன்னும் பிறகட்சிகள் கூட்டணி அமைத்து, தேசிய மக்கள் கட்சி தலைமையில் ஆட்சியை அமைத்தது.
இந்நிலையில், தேசிய கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா மார்ச் 6ஆம் தேதி பதவி ஏற்றார். அவர் இதற்கு முன்னர் துரா மக்களவை எம்பி ஆக இருந்தார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், ஒருவர் ஆறு மாதத்திற்குள் எம் எல் ஏ ஆக வேண்டும். இதற்காக அவருடைய சகோதரி அகதா சங்மா தெற்கு துரா தொகுதியின் எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து, இந்த தொகுதிக்கான காலி இடத்தை இடைத்தேர்தலில் போட்டியிட்டார் கான்ராட். தற்போது இந்த தொகுதிக்கான தேர்தல் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. அதன் எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டது. சுமார் 8,400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தன்னுடைய முதல்வர் பதவியை தக்கவைத்துள்ளார்.