உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் மற்றும் பாபர் மசூதி தொடர்பான நில வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை சம்பந்தப்பட்ட 3 அமைப்புகள் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து 14 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கில் மத்தியஸ்த குழுவை நியமிக்கலாம் என நீதிபதி எஸ்.ஏ.பாப்டே யோசனை தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து இன்றைய விசாரணையில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இது குறித்த விவாதங்கள் நடைபெற்றன. இந்நிலையில் இந்த மத்தியஸ்த குழுவில் நீதித்துறையை சேர்ந்தவர்கள் இடம்பெறுவார்கள், ஒரு மட்டும் உள்ள அமைப்பாக இல்லாமல் ஒரு குழுவாக நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முடிவு ஏதும் எட்டப்படாத நிலையில் தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.