ராஜஸ்தான் மாநிலத்தில் தித்வானா குச்சாமன் மாவட்டத்தில் கர்ப்பிணி ஒருவர், பிரசவ வழி காரணமாக மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றிற்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அறுவகை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின்னர் அறுவை சிகிச்சை செய்த காயங்கள் குணமான பின்பு கடந்த மூன்று மாதங்களாக அவருக்கு வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டு மருத்துவமனைக்குச் சென்ற போது அவர்கள் அதற்கான காரணத்தை கண்டறியாமல் வயிற்று வலிக்கான மருந்தை மட்டும் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
அதன் பின்பும் வயிற்று வலி நிற்கவில்லை. இதனால் கடும் வேதனைக்கு உள்ளான அந்த பெண் ஜோதாப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பெண்ணியின் வயிற்றில் துண்டு ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மூன்று மாதத்திற்கு முன்பு நடந்த பிரசவத்தின் போது மருத்துவர்கள் கவனக்குறைவாகத் தவறுதலாக துண்டை வயிற்றுக்குள் வைத்து தையல் போட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மீண்டு அறுவை சிகிச்சையின் மூலம் பெண்ணின் வயிற்றில் இருந்த துண்டை எய்ம்ஸ் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். தற்போது அவர் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தால், பெண்ணின் வயிற்றுக்குள் துண்டை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.