மத்திய பிரேதசம், ஹர்தாஸ்பூர் என்னும் ஊரில் காதல் ஜோடி ஒன்று வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளது. அதனால், கோபத்தில் இருந்த காதல் ஜோடியின் குடும்பத்தார்கள், அவர்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து தாக்குயுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் செய்துகொண்ட பெண்ணின் குடும்பத்தார்கள், அவர்கள் இருவரின் மீது கோபத்தில் இருந்துள்ளனர். ஆகையால் அவர்களை கடத்திகொண்டுவந்து, கட்டிப்போட்டு அடித்துள்ளனர். அடிக்கப்பட்ட பெண்ணின் ஆடையை அகற்றி, அவரது தலைமுடியையும் வெட்டி உள்ளனர். மேலும், அந்த ஜோடியை சிறுநீரை குடிக்கச்சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தாக்கப்பட்டவர் தெரிவிக்கையில்," அவர்களுக்கு நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்டது பிடிக்கைவில்லை, அதனால் எங்களை கடத்திவந்து தாக்கியுள்ளனர்" என்றார்.
இந்நிலையில், காவலர்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆறு பேர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. இருவரை கைதும் செய்யப்பட்டுள்ளனர்.