Skip to main content

அடுத்த இரண்டு நாட்களுக்கான வானிலை; பொதுமக்கள் உஷார்...

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

 

 

 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரா, மத்திய பிரதேசம், குஜராத், சத்திஷ்கர், உத்தரபிரதேசம், ஆகிய இடங்களில் அனல்காற்று வீசும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.வழக்கமான அதிகபட்ச வெப்பநிலையை விட, இயல்புக்கு மாறாக குறிப்பிட்ட சில தினங்களில் வெப்பம் அதிகரிக்கும் போது அனல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கவனமாகவும், விழிப்புணர்வோடும் இருக்குமாறு இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்