Published on 07/02/2019 | Edited on 07/02/2019

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 16 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரின் பிஜாப்பூர் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருடன் மாவோயிஸ்டுகள் கடுமையான துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கி சண்டையில் 16 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் தரப்பில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் கேரளா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்டதால் அவர்களை கட்டுப்படுத்த தற்போது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.