விபத்தில் துண்டாகிப்போன காலை தலைக்குக் கொடுத்த கொடூரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள லேக்சுரா பகுதியில் பள்ளிப்பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அம்மாவட்டத்தில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்குள்ளான பள்ளி வாகனத்தின் கிளீனராக பணிபுரிந்துவந்த கான்ஷியாமின் இடதுகால் முழங்காலுக்கு கீழ் துண்டானது.
இந்நிலையில், கான்ஷியாமிற்கு சிகிச்சையளித்தவர்கள் அவரது தலையை உயர்த்திப் பிடிக்க தலையணைக்குப் பதிலாக, அவரது துண்டிக்கப்பட்ட காலை வைத்திருந்தனர். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.
#UttarPradesh: Attendants of a patient allege that staff at Maharani Laxmi Bai Medical College, Jhansi used his severed leg as a pillow for him after he was admitted there upon meeting with an accident, College Principal says 'We've set up committee to probe & will take action'. pic.twitter.com/lJFJ3SCjWf
— ANI UP (@ANINewsUP) March 10, 2018
இந்தத் தகவல் வெகுவிரைவில் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அம்மாநில அரசு இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. ஜான்சி மருத்துவமனை தலைவர் சாதனா கவுசிக், ‘இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்’ என தெரிவித்துள்ளார்.