Published on 21/04/2022 | Edited on 21/04/2022

அபுதாபியில் இருந்து தலை விக்கிற்குள் வைத்து கடத்திவந்த 30 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
நேற்று அபுதாபியில் இருந்து டெல்லி வந்த விமான பயணிகளின் உடைமையை விமான நிலைய போலீசார் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்த ஒரு பயணியை தனியாக அழைத்து சோதனை செய்தபோது 30 லட்ச ரூபாய் மதிப்பிலான 630.45கிராம் தங்கத்தை தலை விக்கிற்குள் வைத்து அவர் கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதனைப் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரைக் கைதுசெய்தனர்.