Published on 29/10/2018 | Edited on 29/10/2018
மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸின் தலைவரும், அந்த மாநிலத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, கட்சியின் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். அதற்காக மாணவர், இளைஞர் அணியின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என்றார். இதன் விளைவாக, கட்சி அமைப்புகளில் இந்த ஆண்டு ஜூன் வரை 25 லட்சமாக இருந்த மாணவர்கள், இளைஞர்கள் எண்ணிக்கை அடுத்த நான்கு மாதத்தில் ஐந்து லட்சம் உயர்ந்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்துமாறு தனது தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். “ ஒவ்வொரு உறுப்பினரும் குறைந்தது ஒருவரையாவது ஒவ்வொரு மாதம் அறிமுகம் செய்ய வேண்டும்” என்று மம்தா கூறியதாக சொல்லப்படுகிறது.