Skip to main content

மகாராஸ்டிவிலும் ஒரு மாதத்தில் 55 குழந்தைகள் பலி!

Published on 09/09/2017 | Edited on 09/09/2017
மகாராஸ்டிவிலும் ஒரு மாதத்தில் 55 குழந்தைகள் பலி!



உத்தரபிரதேச மாநிலத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் வசதி இல்லாததால் 55 பச்சிளம் குழந்தைகள் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாசிக் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 55 குழந்தைகள் இறந்துள்ளன. அதுதவிர, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரை 5 மாதத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதி இல்லாமல் 227 குழந்தைகள் உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை போதிய வென்டிலேட்டர் வசதியின்மை போன்றவையே குழந்தைகள் இறப்பிற்கு காரணம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மகாராஷ்டிரா அரசு குறை பிரசவம், எடை குறைவு போன்றவையே உயிரிழப்பிற்கு காரணம் என கூறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மற்றும் ஃபரூக்காபாத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்திலும் அடுத்தடுத்து குழந்தைகள் உரிழந்துள்ளன. இருமாநிலங்களிலும் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்