தென்மேற்கு பருவமழை மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளதால், கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மற்றும் புனே உள்ளிட்ட பகுதிகளை மழை புரட்டி போட்டுள்ளது. அதே போல் இடைவிடாது பெய்யும் கனமழை காரணமாக அணையில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 23 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கட்டிடங்கள் இடிந்து விழும் சம்பவங்களும் நிகழ்கின்றன.
இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மழையால் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக அரசு முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழையால் மிகுந்த பாதிப்பிற்குள்ளான மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு உதவ விரும்புவோர்கள், முதலமைச்சர் நிவாரண நிதி உதவியை அளிக்கலாம்.
இதற்கான இணைய தள முகவரி: https://cmrf.maharashtra.gov.in/CMRFCitizen/mainindexaction.action (அல்லது) https://cmrf.maharashtra.gov.in/CMRFCitizen/DonationOnlineForm.action ஆகும். நாம் ஒவ்வொரு வரும் வீட்டிலிருந்தவாறே மகாராஷ்டிரா மாநில மக்களுக்கு கைக்கொடுக்கலாம். மேலும் முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியை அளிப்போர்கள், வருமான வரித்துறை சட்டம் 80G படி அவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.