Published on 10/04/2025 | Edited on 10/04/2025

கிரிண்டர் செயலியை தடை செய்யக்கோரி தமிழக அரசுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் குறித்து பல்வேறு நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இருப்பினும் பல்வேறு நவீன முறைகளில் போதைப் பொருட்கள் விற்பனை என்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 'கிரிண்டர்' என்ற ஆப் மூலம் போதைப்பொருள் அதிகப்படியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதற்கு முன்பாகவே வழக்கு ஒன்றில் நீதிமன்றம் இந்த ஆப்பை தடை செய்வது குறித்து பரிசீலிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கிரிண்டர் செயலியை தடை செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அருண் சார்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.