Published on 13/04/2021 | Edited on 13/04/2021

இந்தியாவில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மகாராஷ்டிராவில் 34 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக அங்கு கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகிறது. இதனால், இரவு நேரத்தில் பொதுமுடக்கம், விடுமுறை தினங்களில் பொதுமுடக்கம் என்று அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இருந்தாலும் தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகி வருகிறது.
இந்நிலையில், நாளை இரவு எட்டு மணி முதல் அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அனைத்து அலுவலகங்களும் மூடியிருக்கும், தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.