லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆய்வு மேற்கொண்டார்.
லடாக் பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையேயான மோதலுக்கு பின்னர் இருதரப்பு உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் இந்திய எல்லைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். நேற்று லடாக்கில் உள்ள லே நகருக்கு சென்ற அவர் லே பகுதிக்கு மேல் இருக்கும் ஸ்டக்னா, லுகுங் பகுதிகளை ஆய்வு செய்தார்.
பயணத்தின் இரண்டாம் நாளான இன்று ஸ்ரீநகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராஜ்நாத்சிங், குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஆய்வு செய்ததோடு, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுடனும் கலந்துரையாடினார். பரபரப்பான சூழலுக்கு மத்தியில் கடந்த மூன்றாம் தேதி பிரதமர் மோடி லடாக் பகுதிக்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.