Skip to main content

தேர்தல் நேரத்தில் கட்சி தாவுவதற்கு தயாரான எம்.எல்.ஏ க்கள்... அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சி...

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததன் காரணமாக அம்மாநிலத்தில்  ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ், மஜக கூட்டணி அரசு கவிழ்ந்து பாஜக ஆட்சியமைத்தது. இந்நிலையில் தற்போது மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  எம்.எல்.ஏ க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் பாஜகவில் இணைய தாங்கள் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

 

maharashtra congress mla resigned and says willing to join in bjp

 

 

பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ காளிதாஸ் கோலம்கர், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் ஷிவன்திரசிங்ராஜே போஷலே, வைபவ் பிசாட், சந்தீப் நாயக் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடந்த இந்த எம்.எல்.ஏ ராஜினாமா காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்