காமன்வெல்த் சபாநாயகர்கள் பங்கேற்ற மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட தேசியக்கொடியில் மேட் இன் சீனா என இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் வழங்கப்பட்ட இந்திய தேசியக்கொடியில் மேட் இன் சீனா என பொறிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் ஹாலிபெக்ஸ் நகரில் 65வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு நடைபெற்றது. பல்வேறு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கடந்த 22ம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் அப்பாவு பங்கேற்றார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் பங்கேற்றார். பல்வேறு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
மாநாடு நடைபெற்ற வளாகத்தில், கலந்து கொண்ட சபாநாயகர்கள் தங்கள் நாடுகளின் கொடிகளை ஏந்திக்கொண்டு பேரணியாக வந்தனர். அதில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்கள் ஏந்தி வந்த கொடிகளில் மேட் இன் சீனா என அச்சிடப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்திய தேசிய கொடிகளை ஏந்தி வந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.