308 கிலோ அளவுக்கு டேட்டிங் போதைப் பொருள் சிக்கியுள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் சார்பில் பேன் இந்தியாவின் ஆப்பரேஷன் விட்டமின், சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் போதைப்பொருட்கள் மீதான சோதனை வேட்டை நடத்தப்பட்டது. அதன்படி கோவா, வதோதரா மற்றும் ராய்காட் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் தயாரித்து வந்த மருந்து நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. இந்த நிறுவனங்களில் இருந்து இலங்கை, மொசாம்பி, இங்கிலாந்து, கென்யா, மலேசியா, கனடா உள்ளிட்ட ஏராளமான நாடுகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தல் செய்யப்படுவதும், பணப்பரிவர்த்தனைகள் ஹவாலா முறையில் நடத்தப்பட்டதும் தெரியவந்தது.
அது மட்டுமின்றி போதைப்பொருட்களை சோதனை நடத்தியதில் 308 கிலோ எடையுள்ள கீட்டமின் எனப்படும் டேட்டிங் போதைப்பொருள், கோக்கெய்ன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிறுநீரகம், பித்தப் பைகளை பாதித்து உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் இந்த வகை போதைப் பொருட்களை உற்பத்தி செய்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.