Skip to main content

‘விமானம் வேண்டாம், சுதந்திரமாக எங்களை விடுங்கள்’- கவர்னருக்கு ராகுல் பதிலடி

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. மேலும் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 

rahul gandhi

 

 

இதனையடுத்து கடந்த 10ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ராகுல், “காஷ்மீரில் வன்முறை நடைபெறுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அங்கு என்ன நடக்கிறது என பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
 

ராகுல் இந்த வேண்டுகோளுக்கு பதிலளித்த காஷ்மீர் கவர்னர் சதய் பால் மாலிக், “ராகுல் காந்தி நாட்டின் மிகப்பெரிய கட்சியின் இளம் தலைவர். அவரிடம் இருந்து மிகவும் முதிர்ச்சியடைந்த அறிக்கையை எதிர்பார்க்கிறேன். ராகுல் காந்தியை காஷ்மீருக்கு வந்து பார்வையிடுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். ஜம்மு-காஷ்மீர் அரசுக்க்கு சொந்தமான விமானத்தை டெல்லிக்கு அனுப்புகிறோம். அதில் பயணித்து காஷ்மீருக்கு வாருங்கள்.  இங்கு நிலைமை மிகவும் சீராகத்தான் உள்ளது என்பதை தெரிந்துக் கொள்வீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
 

இந்நிலையில் கவர்னரின் இந்த அழைப்பை ஏற்று காஷ்மீர் வர இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், “நானும் எதிர்க்கட்சி தலைவர்கள் குழுவும் உங்களின்  அழைப்பை ஏற்று ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியை பார்வையிட வருகிறோம். இதற்காக நீங்கள் எங்களுக்கு விமானம் அனுப்ப வேண்டியதில்லை. ஆனால், அங்கு சுதந்திரமாக பயணம் செய்து மக்களையும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களையும் நமது ராணுவ வீரர்களையும் நாங்கள் சந்திப்பதை நீங்கள் உறுதிப்படுத்தினால் போதும்” என்று பதிலடி கொடுத்துள்ளார் ராகுல்.

 

 

சார்ந்த செய்திகள்

 
News Hub