Skip to main content

இந்தியாவில் படையெடுப்பை தொடங்கிய வெட்டுக்கிளிகள் கூட்டம்... நாசமாகும் உணவுப்பொருட்கள்...

Published on 25/05/2020 | Edited on 25/05/2020

 

locusts returned to india

 

இந்தியாவில் மீண்டும் வெட்டுக்கிளிகள் கூட்டம் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களிலுள்ள விவசாயப் பயிர்களுக்குக் கடுமையான சேதங்களை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. 


ஜூலை 2019 முதல் இந்த ஆண்டின் தொடக்கம் வரை ராஜஸ்தான் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் 3.6 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்களை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள் படையெடுப்பு, பின்னர் அங்கிருந்து பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கும் பரவியது. லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள விவசாய பயிர்களை நாசம் செய்தன. இதனை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஏதும் பலனளிக்கவில்லை. ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 75% பயிர்களை இந்த வெட்டுக்கிளிகள் நாசம் செய்தன.

 

 


இந்த வெட்டுக்கிளி கூட்டம் இந்தியாவை கடந்து பாகிஸ்தான் மற்றும் சோமாலியா, கென்யா, எத்தியோப்பியா, உகாண்டா  போன்ற ஆப்பிரிக்கா நாடுகளில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தின. இந்நிலையில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்ய ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே மேற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தானில் சுமார் 5,00,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவியுள்ள பயிர்களை அழித்துள்ள இந்த கூட்டம், ஸ்ரீ கங்காநகர், ஜெய்சால்மர், பார்மர், பிகானேர், ஜோத்பூர், சுரு மற்றும் நாகூர், அஜ்மீர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு பயிர்களை நாசப்படுத்தும் திறன் கொண்ட இந்த கூட்டத்தால், கடந்த ஆண்டே மகசூலை இழந்த விவசாயிகள் தற்போது இவற்றின் வரவால் அச்சத்திலும், கவலையிலும் ஆழ்ந்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்