மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான நான்காவது வழக்கில் லல்லு பிரசாத்திற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான லல்லு பிரசாத்திற்கு மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான (தும்கா கருவூலத்தில் இருந்து 3.13 கோடி மோசடி செய்தது) நான்காவது வழக்கில் ஏழாண்டுகள் சிறை, 30 லட்சம் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்தார் நீதிபதி ஷிவ்பால் சிங். 1990களில் பீகார் மாநிலத்தின் மாட்டுத் தீவனம் தொடர்பாக போலி பில்கள் தந்து, கருவூலங்களில் 950 கோடி ஊழல் செய்தது குறித்து சி.பி.ஐ. விசாரித்தது. இதில் லல்லு பிரசாத்திற்கு எதிராக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
முதல் வழக்கில் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டாவது வழக்கில் மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. மூன்றாவது வழக்கில் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஐந்து லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வெளியான நான்காவது வழக்கின் தீர்ப்பில் ஏழாண்டுகள் சிறைத்தண்டனையும், 30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.