மேடம் துசாட்ஸ் என்ற மெழுகு சிலை சிற்ப அருங்காட்சியகம் அரசியல், விளையாட்டு, பொதுசேவை, சினிமா என பிரபலங்களின் மெழுகு சிலைகளை காட்சிப்படுத்திவருகிறது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ''மேடம் துசாட்ஸ்'' இந்தியாவில் டில்லியில் 2017ஆம் ஆண்டு தன் கிளையை தொடங்கி இந்தியாவின் பிரபலங்களின் மெழுகு சிலைகளை காட்சிப்படுத்திவருகிறது.
இதுவரை சச்சின், அமிதாப்பச்சன், ரித்திக் ரோஷன், நரேந்திர மோடி, ஷாருக்கான் இன்னும் பல பிரபலங்களின் மெழுகுசிலைகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. அந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சிலையும் அமைப்பதற்காக அவரை அணுகி அவருடைய அங்கங்களின் அளவுகளை சேகரித்தது. இதை பற்றி கோலி கூறுகையில் சச்சின், கபில்தேவ், கால்பந்து வீரர் ரொனால்டோ போன்ற பல ஜாம்பவான்கள் இடம்பிடித்துள்ள அந்த மெழுகுசிலை காட்சியகத்தில் தனக்கு சிலைவைக்க கோரியிருப்பது எனக்கு கிடைத்த கவுரவமாக கருதுகிறேன்.
இதற்காக மேடம் துசாட்ஸ் மெழுகு சிற்ப குழுவிற்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.