அண்மையில் டெல்லியில் பூட்டியிருந்த வீட்டில் தூக்கில் தொங்கியபடி 7 பெண்கள் உட்பட11 பேர் சடலங்கள் மீட்கப்பட்டு அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கபட்டிருந்தது. இந்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் மாந்தீரீகம் மற்றும் அமானுஷ்யம் போன்ற காரணங்களால் உருவான சம்பவமா? என எண்ணும் நோக்கில் புரியாத சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
டெல்லியில் புகாரியில் ஒரு உள்ள குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டின் கதவு பலமணிநேரம் பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தினர் பலமுறை கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தவகவலை அடுத்து அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அங்கு 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் உட்பட 11 பேரின் சடலம் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ந்தனர்.
மேலும் இறந்த அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டறிந்துள்ளனர். தூக்கில் தொங்கிய அந்த 11 பேரின் கண்களும் வாயும் துணியால் கட்டப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது எனவே போலீசாருக்கு இது திட்டமிட்ட கொலையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த சம்பவம் திட்டமிட்ட கொலையா? அல்லது உண்மையிலேயே தற்கொலையா? என போலீசார் விசாரித்து வந்தனர்.
அப்படி இருந்த நிலையில் அந்த வீட்டில் நடந்தது அமானுஸ்ய மாந்த்ரீக கொலை என ஒரு பேச்சு அடிபட்டது. இந்நிலையில் அது உண்மையோ என சந்தேகிக்கும் வகையில் அந்த வீட்டின் வெளிப்புறம் அந்த அறையின் சுவற்றில் மொத்தம் 11 பைப் துளைகள் இருந்துள்ளது. அந்த துளையில் 4 துளைகள் நேராகவும் 7 துளைகள் வளைந்தும் இருந்தது. அந்தவீட்டில் இறந்த ஆண்கள் எண்ணிக்கை 4 இறந்த பெண்கள் எண்ணிக்கை 7. அடைக்கப்பட்ட வீட்டில் இறந்த ஆவிகள் வெளியேறவே இந்த துளைகள் அமைக்கப்பட்டதாக பேச்சு அடிபட இப்படி புரியாத சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது அந்த சம்பவம். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மாந்தீரீகம் பற்றிய பீதி கிளம்பியுள்ளது.