Skip to main content

ராகுல் காந்தியுடன் குஷ்பு சந்திப்பு

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
ராகுல் காந்தியுடன் குஷ்பு சந்திப்பு

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை கட்சியின் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு நேற்று சந்தித்து பேசினார். டெல்லிக்கு நேற்று சென்ற குஷ்பு, கட்சி அலுவலகத்தில் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். பின்னர் அவரது தரப்பில் இது தொடர்பாக கூறும்போது, அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டது. 

கடந்த ஜூலையிலும் டெல்லி சென்ற அவர், ராகுலை சந்தித்து பேசியிருந்தார். தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலைகளை பற்றி அவர் ராகுலிடம் பேசியதாகவும் கட்சி பணிகளில் தொடர்ந்து தீவிரமாக பணியாற்ற குஷ்பு முடிவு செய்துள்ளதாகவும் அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்