Skip to main content

கணவனுக்கு ஏற்பட்ட செயலிழப்பு; உடலுறவு இல்லாமல் வாழ்க்கையை வெறுத்த மனைவி - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 80

Published on 11/09/2024 | Edited on 11/09/2024
advocate santhakumaris valakku en 80

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

தனலெட்சுமி என்ற பெண்ணுடைய வழக்கு இது. இவருக்கு ஒரு வரன் வருகிறது. பையன் ரயில்வே துறையில் வேலை பார்க்கிறான். இவர்கள் இருவரும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருவருக்கும் இந்த திருமணம் பிடிக்காமல் போனாலும் வேறு வழியின்றி பெற்றோர் சம்மதத்துடன் இவர்களுக்குள் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு முன்பாகவே, மாப்பிள்ளைக்குண்டான தோரணை, நடை, பாவனை எல்லாம் இல்லாமல் இருந்த பையனை கண்டு பெண் வீட்டாருக்கு சந்தேகம் இருந்தாலும், வேறு மாப்பிள்ளை கிடைக்காமல் போனதால், அவர்கள் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கின்றனர். பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட சீர், சீதனத்தை கண்டு மனைவியிடம் பையன் குறை கூறுகிறான். அன்று இரவு நடந்த முதலிரவில், பையனுக்கு எந்தவித ஆர்வமும் இல்லை. பெண்ணுக்கும் இதை பற்றி தெரியாமல் போனதால், அவர்களுக்குள் எந்தவிதமான உடலுறவும் அன்றைக்கு நடக்கவில்லை. 

இது பற்றி தனலெட்சுமியிடம், மாமியார் கேட்டு விசாரித்ததில், அவர்களுக்குள் எதுவும் நடக்கவில்லை எனத் தெரிந்தது. மேலும், பெண்ணுடைய அப்பா வீட்டில் தங்கி வேலைக்கு போகிறான். அங்கு, மாமனார் தனக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என தனலெட்சுமியிடம் சண்டை போடுகிறான். இதற்கிடையில், பையனுக்கு மகாராஷ்டிராவிற்கு டிரான்ஸ்பர் கிடைக்கிறது. இதனிடையே, தனி அறைக்கு நடக்கும், சில விஷயங்கள் தனக்கு நடக்கவில்லை என தனலெட்சுமிக்கு தெரிகிறது. தனலெட்சுமியும், பையனும் மகாராஷ்டிராவிற்கு செல்கிறார்கள். பாஷை தெரியாததால், தனலெட்சுமி மிகவும் சிரமப்படுகிறாள். அதனால், அவளுக்கு வயிறு நிறைய மாப்பிள்ளை சாப்பாடு போடுவதில்லை. ஆனால், பையன் வெளியே சென்று நிறைய சாப்பிட்டுவிட்டு தான் வருவான். தனலெட்சுமி வற்புறுத்தலின் பேரில், அவளுடைய பெற்றோரும் மகாராஷ்டிராவிற்கு செல்கிறார்கள். அங்கு, மகளிடம் கேட்டு விசாரித்ததில், அவர்களுக்குள் எந்தவித உறவும் நடக்கவில்லை என்று தனலெட்சுமியின் பெற்றோருக்கு தெரிகிறது. மேலும், பெண்ணுக்கு தேவையான பொருட்கள், சாப்பாட்டுக்கான பொருட்கள் என அனைத்தையும் பெற்றோருக்கு வாங்கி கொடுத்துவிட்டு தங்களுடைய வீட்டுக்கு வருகிறார்கள். 

அதிகம் செலவு ஆவதால், மனைவி தன்னுடன் இருப்பதை அவன் விரும்பவில்லை. இதற்கிடையில், மாமனார் அறிவுறுத்தலின் பேரில் ஆடி மாத நேரத்தில் மனைவியை அவளுடைய வீட்டுக்கு விட்டுவிட்டு அவன் மகாராஷ்டிராவிற்கு செல்கிறான். தங்களுக்குள் ஏன் தாம்பத்ய உறவு நடக்கவில்லை என மனைவி கேட்க, அவன் ஏதோ ஒன்றை சொல்லி சமாளிக்கிறான். மருத்துவரிடம் இருவரும் சென்று செக் அப் செய்கிறார்கள்.  பையனுக்கு மரபு ரீதியான ஏதோ ஒரு கோளாறு இருப்பதாகவும், அதன் காரணமாக அவருக்கு செயலிழந்துவிட்ட நிலையிலும் இருந்திருக்கிறான். ஆனால், இந்த விஷயம் தனலெட்சுமிக்கு தெரியாமல் டாக்டர் பார்த்துக்கொள்கிறார். அதன் பிறகு, ஆறு மாதம் கடந்த நிலையிலும், அவர்களுக்குள் எதுவும் நடக்கவில்லை. தல தீபாவளியின் போது, 1 பவுன் மோதிரம் கொடுக்க வேண்டும் என பையன் கேட்க, மாமனார் அரை பவுனுக்கு தங்க மோதிரம் எடுத்து போடுகிறார். இதனால், அதை வாங்க மறுத்து மனைவியிடம் அவன் வாக்குவாதம் செய்கிறான். ஆனாலு, ஊருக்கு போகும் போது, அந்த மோதிரத்தை எடுத்துக்கொண்டு போகிறான். இவளும், தனக்கு எந்தவித அரவணைப்பும் கிடைக்காததால், மனமுடைந்து மகாராஷ்டிராவில் இருந்து அம்மா அப்பா வீட்டுக்கு வருகிறாள். அங்கு சென்ற அவள், கணவனோடு வாழ பிடிக்கவில்லை எனச் சொல்கிறாள். பெற்றோர் எவ்வளவோ அறிவுரை சொன்னாலும், அவள் கேட்கவில்லை. 

இந்த நிலையில், தான் என்னிடம் வந்தார்கள். தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ள பையனுக்கு எந்த தகுதியும் இல்லை, அதனால் இந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று தனலெட்சுமி சொன்னாள். நாங்கள் அதன்படி, நோட்டீஸ் அனுப்பினோம். அவன் இங்கு வந்து, கவுன்சிலிங்கில் தனலெட்சுமியிடம் ரொம்ப கெஞ்சி பேசினான். தான் செய்தது தவறு, இனிமேல் சந்தோஷமாக வாழலாம் என தனலெட்சுமியிடம் தேன் உருக பேசினான். ஆனால், இவள் எதற்கும் அசையவில்லை. இதனை தொடர்ந்து, அந்த பையன் மகாராஷ்டிரா கோர்ட்டில் சேர்ந்து வாழ மனு போடுகிறான். எனது அறிவுறுத்தலின் பேரில், தான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த கேஸை தமிழ்நாட்டுக்கு மாற்றி கொடுக்க வேண்டும் என மகாராஷ்டிரா கோர்ட்டில் உள்ள இலவச சட்ட உதவி மையத்திற்கு அவள் லெட்டர் போட்டாள். அதன்படி, மகாராஷ்டிராவில் போட்ட கேஸை, தமிழ்நாட்டிற்கு மாற்றினார்கள். மீடியேசனில், டாக்டரிடம் செக் அப் செய்ய வேண்டும் என்று கேட்டாலும், பையன் தயாராக இல்லை. திருமணத்திற்கு ஆன செலவு, மெயிண்டெனன்ஸ் எதையும் பையன் கொடுக்க மறுத்தான். பெண்ணுடைய அப்பாவும், அவனிடம் இருந்து எந்தவித பணமும் தனக்கு தேவையில்லை என்றவுடன், மீயுட்சுவல் கன்செண்டில் இருவருக்கும் விவாகரத்து ஆனது. 

சார்ந்த செய்திகள்