Published on 15/04/2019 | Edited on 15/04/2019
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் விறுவிறுப்பாக பிரச்சார கூட்டங்கள் நடந்து வருகின்றனர். இதில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவாதிக்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து சாதி மற்றும் மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பிரச்சாரம் செய்து வந்ததால் ஆதித்யநாத்துக்கு நாளை காலை முதல் அடுத்த 72 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல மாயாவதிக்கும் அதே காரணத்திற்காக நாளை காலை முதல் அடுத்த 48 மணிநேரத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.