நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தனது அரசியல் வருககைக்கு பிறகு இரண்டு படங்கள் நடிப்பதாக தெரிவித்திருந்தார். இதில் ஒரு படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம் படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விஜய்யின் 68வது படமாக வெளியாகியிருந்த இப்படம் முதல் நாளில் ரூ.126 கோடிக்கு மேல் வசூல் செய்த இப்படம் தற்போது ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையில் விஜய்யின் கடைசி படமான அவரது 69வது படத்தை அ. வினோத் இயக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு த்ரிஷா, சமந்தா, மிருணாள் தாக்கூர், பாலிவுட் நடிகை ஆலியா பட், சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகளிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து ‘பிரேமலு’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மமிதா பைஜுவும் இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.
இதையடுத்து இப்படத்தினை தெலுங்கு நிறுவனமான கே.வி.என். தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. மேலும் அந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை கண்கலங்க செய்தது. அந்த வீடியோவில் விஜய்யின் பழைய படங்களிலுள்ள அவரது அறிமுக சீன்கள் எடிட் செய்து இடம் பெற்றிருந்தது. மேலும் விஜய்யின் ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விஜய் படங்களில் வேலை செய்பவர்கள் என அனைவரும் உருக்கமாக பேசியிருந்தார்கள். அதோடு இன்று படத்தின் அறிவிப்பு வெளியாகும் என சொன்ன நிலையில் தற்போது அதன் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.
அ.வினோத் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், “ஜனநாயகத்தின் ஒளி ஏற்றுபவர்” என்ற வாசகத்துடன் கையில் தீப ஒளி ஏற்றும் புகைப்படம் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இப்படம் அரசியல் கதைகளத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.
We are beyond proud & excited to announce that our first Tamil film is #Thalapathy69, directed by the visionary #HVinoth, with music by the sensational Rockstar @anirudhofficial 🔥
Super happy to collaborate with the one and only #Thalapathy @actorvijay ♥️
The torch bearer of… pic.twitter.com/Q2lEq7Lhfa— KVN Productions (@KvnProductions) September 14, 2024