Skip to main content

200 பழங்குடியின பெண்கள்; ஒன்று கூட பார்த்த முதல் தமிழ் படம்!

Published on 14/09/2024 | Edited on 14/09/2024
200 Tribal Watch Thangalaan in Maharashtra Theater For 1st Time

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படம் தமிழ் நடிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. 

இப்படத்திற்கு திருமாவளவன் எம்.பி., சீமான், சேரன் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்தனர். இதையடுத்து படத்திற்கு கிடைத்த வரவேற்பு தொடர்பாக படக்குழுவினருக்கு உணவு விருந்து வைத்தார் விக்ரம். இப்படத்தின் இந்தி பதிப்பு கடந்த 6ஆம் தேதி வெளியானது. அங்கு நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் கூடுதல் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. 

200 Tribal Watch Thangalaan in Maharashtra Theater For 1st Time

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் முதல் முறையாக 16 கிராமத்தை சேர்ந்த 200 பழங்குடியின பெண்கள் தங்கலான் படத்தை ஒரு திரையரங்கில் பார்த்துள்ளனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்