இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையில் ஏற்பட்ட பாதிப்பு அனைத்து மாநிலங்களிலும் குறைந்து வந்தாலும் கேரளாவில் அதன் பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் குறைவாகப் பதிவாகி வரும் சூழலில், கேரளாவில் இந்த எண்ணிக்கை சில தினங்களுக்கு முன்பு வரை 20 ஆயிரத்தை கடந்து இருந்து வந்தது. இதனால் அந்த மாநில அரசு ஞாயிறு உள்ளிட்ட தினங்களில் முழு ஊரடங்கை அறிவித்தது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று கேரளாவில் தினசரி பாதிப்பு 12,294 பேர் என்ற அளவில் பதிவாகி உள்ளது. மேலும், 18,542 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 142 பேர் மரணமடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை பெரிய அளவில் இருப்பது அம்மாநில மக்களை வருத்தமடையச் செய்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 1.72 லட்சம் பேர் சிகிச்சையிலிருந்து வருகிறார்கள்.