அமெரிக்கா மருந்து நிறுவனமான நோவாவாக்ஸ், கரோனா தடுப்பூசி ஒன்றை தயாரித்து உள்ளது. சமீபத்தில் அந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை முடிவுகளை நோவாவாக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதில் ஒட்டுமொத்தமாக தங்கள் தடுப்பூசிக்கு 90.4 சதவீதம் செயல்திறனும், கவலை தரும் மரபணு மாற்றமடைந்த கரோனாக்களுக்கு எதிராக 93 சதவீத செயல்திறனும் உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நோவாவாக்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசியை, அந்த நிறுவனத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தநிலையில் அந்த நோவாவாக்ஸ் தடுப்பூசியை, கோவாவாக்ஸ் என்ற பெயரில், வரும் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த சீரம் நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், வரும் ஜூலை மாதம் முதல், நோவாவாக்ஸ் தடுப்பூசியை குழந்தைகள் மீது பரிசோதிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.