Published on 18/01/2019 | Edited on 18/01/2019

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டங்களையும் மீறி சில பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயற்சி செய்து தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ள அதிகாரபூர்வ தகவலின் படி இதுவரை சபரிமலையில் 51 பெண்கள் ஐயப்பனை வழிபாடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதில் 24 பெண்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும் கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருங்காலத்திலும் பெண்கள் சபரிமலையில் ஐயப்பனை வழிபட பாதுகாப்பு தருவதாகவும் கேரள அரசு உறுதியளித்துள்ளது.