Skip to main content

கேரளா தங்க கடத்தல் விவகாரம்... ஸ்வப்னாவை 7 நாள் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு அனுமதி!! 

Published on 13/07/2020 | Edited on 13/07/2020
 Kerala gold case: NIA allowed to interrogate Swapna in custody for 7 days

 

கேரளாவையே உலுக்கிய தங்க கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக, தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பெங்களூரில் கைது செய்த இருவரையும் கொச்சி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக இருவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

 

அதன்பின் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்வப்னா, சந்தீப் ஆகியோருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் கரோனா பரிசோதனை முடிவுகள் அவர்களுக்கு பாதிப்பில்லை என்று முடிவுகள் வந்துள்ள நிலையில், அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அம்மனுவில் என்.ஐ.ஏ. கோரிக்கை வைத்திருந்தது.

 

இந்நிலையில் ஸ்வப்னா, சந்தீப் ஆகியோரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ .ஏ.வுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்