இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது.
தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. இதனால் அம்மாநில அரசு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகின்றது. தமிழகத்தை விட அதிகமான பாதிப்புகளை கேரளா தினமும் சந்தித்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் ஓணம் பண்டிகைக்காக கொடுக்கப்பட்ட தளர்வின் காரணமாகவே கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி அம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.