கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியருக்கு, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு, ஆதி என்ற பெயர் வைக்கவேண்டும் மனைவி விருப்பப்பட்டுள்ளார். ஆனால், கணவர் அதனை ஏற்க மறுத்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பல மாதங்கள் தீராத பிரச்சனையால், தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும், ஜீவனாம்சம் வேண்டும் என்றும் மனைவி மைசூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கணவன் மனைவி இடையே உண்மையான பிரச்சனை என்னவென்று தெரிந்துகொண்டது.
அதன் பின், நீதிமன்றம் தம்பதியிடம் பலமுறை ஆலோசனைகளை வழங்கிய போதும், அதனை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில், கடந்த வாரம் மைசூர் நீதிமன்றம் தம்பதியை அழைத்தது. அதன் பின்பு, அந்த குழந்தைக்கு ஆர்யவர்தன் என்று பெயரிட முடிவு செய்யப்பட்டது.இறுதியாக தம்பதியினர் பிரச்சனையை தீர்த்துகொண்டு தற்போது குழந்தையுடன் வாழ்ந்து வருகின்றனர்.