Published on 25/06/2020 | Edited on 25/06/2020

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது.
இன்று மட்டும் கேரளாவில் 123 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3,726 பேர் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர். மொத்தமாக 1,761 மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.