Published on 01/03/2019 | Edited on 01/03/2019
புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் இதற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது. அந்த இயக்கங்களின் தலைவர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு நெருக்கமானதாக கருதப்படும் ஜமாத் - இ-இஸ்லாமி இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.