கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நிறைவு -
மீண்டும் 23ல் ஆஜராக உத்தரவு
அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரத்திடம் 8 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. கார்த்தி சிதம்பரத்திடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் முன் வைக்கப்பட்டன என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கார்த்தி அளிக்கும் தகவல்களை அறிக்கையாக செப்டம்பர் 1ம் தேதி தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த விசாரணை நடைபெற்றுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மீண்டும் ஆஜராக கார்த்தி சிதம்பரத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.