Skip to main content

புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதும் முறை கொண்டுவரப்படும்!!! -அமைச்சர் அறிவிப்பு

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

வருங்காலங்களில் மாணவர்கள் புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதும் முறை கொண்டுவரப்படும் என்று கர்நாடக அமைச்சர் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.


 

MAHESH



 

 


கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியை அடுத்து, தொடக்க கல்வி அமைச்சராக பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மகேஷ் பொறுப்பேற்றுள்ளார். 

 

சாம்ராஜ் நகரில் நடந்த மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அமைச்சர், "பல துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் புத்தகத்தை பார்த்து குறிப்புகள் எடுக்கின்றனர். ஆனால், மாணவர்கள் மட்டும் ஏன் புத்தகத்தை பார்க்காமல் தேர்வு எழுத வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். விரைவில், தொடக்க மற்றும் இடைநிலை மாணவர்களுக்கு நடக்க இருக்கும் தேர்வுகளில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறை கொண்டுவரப்படும் என்றும் கூறினர்.

 

 

 

இதுகுறித்து பல நிபுணர்களிடமும், மனோதத்துவ மருத்துவர்களிடமும் ஆலோசித்து வருவதாகவும் மேடையில் பேசினார். அதை கவனித்து கொண்டிருந்த மாணவர்கள் குதுகலமாகினார்கள். அமைச்சரின் இந்த பேச்சுக்கு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்